Daily Current Affairs in Tamil
நடப்புநிகழ்வுகள் - அக்டோபர் 2019
அக்டோபர் - 1
- "சிங்கப்பூர்-இந்தியா ஹேக்கத்தான்" போட்டி சென்னை IIT யில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் கல்வி அமைச்சர் ஓங் யீ குங் பங்கேற்றார்.
- சென்னையில் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், பிறந்த தேதி, முகவரி, புகைப்படம் மற்றும் பாலினம் உள்ளிட்ட விவரங்களை தாங்களே திருத்திக்கொள்ள "Voter Helpline App" என்ற சிறப்பு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ. 178 ஊதியமாக வழங்கப்படுகிறது.
- அக்-1 தேசிய தன்னார்வ இரத்ததான தினம்
- 2016-17 தேசிய கல்வித்தரக்குறியீட்டில் கேரளா முதலிடம். தமிழ்நாடு 8ம் இடம்.
- 26வது இந்தியா விமானப்படைத் தளபதியாக R.K சிங் பதவுரியா நியமனம்.
- அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த சுமித் நாகல் பட்டம் வென்றார்.
அக்டோபர் - 2
1. பன்றிக்காய்ச்சலுக்கு நடப்பாண்டில் 1177 பேர் பலி. இது H1N1, H2N3 போன்ற இன்ஃபுளுயன்சா வைரஸ்களால் ஏற்படுகிறது.
2. செப்டம்பர் மாத GST வரி வசூல் 91916 கோடி. இது 19 மாதங்களில் இல்லாத வகையில் நிறைவு.
3. மாலத்தீவு நாட்டின் தேசிய பாதுகாப்பு படையினருக்கு இந்திய கடற்படையின் 12 நாள் பயிற்சியளிப்பு சென்னையில் தொடங்கியது.
4. SC/ST வன் கொடுமை தடுப்பு சட்டத்தில் விசாரணையின்றி கைது செய்யலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
5. இன்று (அக்-2): காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்த தினம். காமராஜர் நினைவு தினம்.
6. மனிதக் கழிவை அகற்றும் நவீன ரோபோ கோவையில் அறிமுகம்.
அக்டோபர் - 3
1. மகாத்மாவின் 150-ஆவது பிறந்த தினத்தை நினைவு கூரும் வகையில் 150 ரூபாய் நாணயத்தை மோடி வெளியிட்டார்.
2. மகாத்மா காந்தி தொடர்பான 6 தபால் தலைகளையும் மோடி வெளியிட்டார்.
3. கண்காணிப்பைப் பலப்படுத்தும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 'செக்வேஸ்' என்னும் நவீன ஸ்மார்ட் வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
4. ஊரக சுகாதாரத்தில் தரம் மற்றும் உள்கட்டமைப்புக்கான விருது தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
5. கசகஸ்தான் நூர்சுல்தான் நகரில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவைச்சேர்ந்த தீபக் புனியா வெள்ளி வென்றார்.
6. நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவக்கூடிய "பக்குக்சாங்" ரக ஏவுகணையை வட கொரியா சோதனை.
7. செப்டம்பரில் அமேசான் காட்டுத்தீ பெருமளவில் குறைப்பு. முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 20000 காட்டுத்தீ சம்பவங்கள் நடந்துள்ளன.
அக்டோபர் - 4
1. கட்டாய தலைக்கவச சட்டப்படி 2019 ஆகஸ்டு மாதம் வரை 43 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2. மத்திய அரசு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை, பொருட்களுக்கு அக்.2 முதல் தடை விதித்துள்ளது.
3. சிக்கிம் மாநிலத்தில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த டோக்கலாம் பகுதிக்கு செல்வதற்கான முதற்கட்ட சாலை அமைக்கும் பணிகள் நிறைவு. 2021 மார்ச்சுக்குள் முழு பணிகள் நிறைவடையும்.
4. வரும் அக் 17ம் தேதி முதல் இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் இந்திய நகரங்களுக்கு நேரடி விமான சேவை தொடங்குகிறது.
5. மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேவைக்கான தேசிய விருது தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
6. இந்தியா உதவியுடன் மொரீசியஸ் நாட்டில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் மோடி.
7. டெல்லி-கத்ரா இடையே பயணிக்கும் வந்தே பாரத் ரயிலை உள்துறை அமைச்சர் அமீத் ஷா தொடங்கி வைத்தார். கத்ரா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ளது.
8. நாட்டில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அடல் பூஜல் யோஜனா என்ற திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட உள்ளது.
9. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய மாயங்க் அகர்வால் இரட்டை சதம்.
10. புவி காந்த மண்டலத்தையும் சந்திரயான் 2 ஆய்வு செய்யும்.
2. மத்திய அரசு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை, பொருட்களுக்கு அக்.2 முதல் தடை விதித்துள்ளது.
3. சிக்கிம் மாநிலத்தில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த டோக்கலாம் பகுதிக்கு செல்வதற்கான முதற்கட்ட சாலை அமைக்கும் பணிகள் நிறைவு. 2021 மார்ச்சுக்குள் முழு பணிகள் நிறைவடையும்.
4. வரும் அக் 17ம் தேதி முதல் இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் இந்திய நகரங்களுக்கு நேரடி விமான சேவை தொடங்குகிறது.
5. மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேவைக்கான தேசிய விருது தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
6. இந்தியா உதவியுடன் மொரீசியஸ் நாட்டில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் மோடி.
7. டெல்லி-கத்ரா இடையே பயணிக்கும் வந்தே பாரத் ரயிலை உள்துறை அமைச்சர் அமீத் ஷா தொடங்கி வைத்தார். கத்ரா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ளது.
8. நாட்டில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அடல் பூஜல் யோஜனா என்ற திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட உள்ளது.
9. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய மாயங்க் அகர்வால் இரட்டை சதம்.
10. புவி காந்த மண்டலத்தையும் சந்திரயான் 2 ஆய்வு செய்யும்.
நடப்பு நிகழ்வுகள் - 05.10.19 | Sparks Academy
----------------------------------------------------------------------
1. தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு. இதனை www.tnsec.tn.nic.in என்ற மாநில தேர்தல் ஆணைய இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
2. எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவ மாணவர் சேர்க்கையும் இனி நீட் தேர்வு மூலமாகவே நடத்தப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவிப்பு.
3. முதுபெரும் கவிஞர் ஆலந்தூர் கோ. மோகனரங்கம் வெள்ளிக்கிழமை அக்.4 சென்னையில் காலமானார். இவர் மரபுக்கவிதைகளை எழுதியவர். இவரின் "நூலகத்தால் உயர்ந்தேன்" எனும் நூலில் 2500 படைப்பாளிகளை பற்றி பதிவு செய்துள்ளார்.
4. நாட்டின் முதல் தனியார் ரயிலான "தேஜஸ்" ரயில் சேவையை டெல்லி - ஆக்ரா இடையே தொடங்கி வைத்தார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்.
5. மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி 611 சிறைக்கைதிகள் விடுதலை. கடந்த ஆண்டு 919 கைதிகள் விடுதலை ஆனார்கள்.
6. இந்திய மகளிர் ஹாக்கி கோல் கீப்பர் 200 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
7. ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டமான "டாப்ஸ்" ன் கீழ் நிதி உதவி பெற உலக மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்ற ரவி தாஹியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
8. ஹாங்காங்கில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் அவர்கள் பயன்படுத்தும் முகமூடிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிகழ்வுகள் - 06.10.19 | Sparks Academy
----------------------------------------------------------------------
1. தீஸ்தா (Teesta) நதிநீர் பங்கீடு ஒப்பந்தம், இந்தியா - பங்களாதேஷ் இடையே விரைவில் தீர்வு காணப்படும் என இந்தியா வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அறிவிப்பு.
2. 7வது பொருளாதாரக் கணக்கெடுப்பு அக்.9 ல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். 1977-2013 வரை 6 முறை பொருளாதாரக் கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.
3. தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கற்றல் செயல்பாடுகளை அறிய புதிய செயலி அறிமுகம். முதற்கட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
4. அக்.1 வரையிலான அந்நிய செலவாணி கையிருப்பு 43,460 கோடி அமெரிக்க டாலர் என்ற வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது.
5. சந்திரயான் 2 நிலவில் சூரிய புயலால் உருவாகும் மின்னூட்டப்பட்ட துகள்களை நிலவில் கண்டுபிடித்துள்ளது.
நடப்பு நிகழ்வுகள்- 07.10.19 | Sparks Academy
--------------------------------------------------------------------------------
1. மத்திய அரசின் "ராஷ்டிர அவிஷ்கார் அபியான்" திட்டத்தின் கீழ் படிப்பில் சிறந்து விளங்கும் 4560 அரசுப்பள்ளி மாணவர்களை அண்டை மாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
2. 1முதல் 8ம் வகுப்பு வரை பணிபுரியும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு "நிஷ்தா" என்ற 5 நாள் பணியிடைப்பயிற்சி அளிக்கப் பட உள்ளது. இதற்கென தனி செல்போன் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
3. நாடு முழுவதும் அக்டோபர் 9 முதல் 15ம் தேதி வரை தேசிய அஞ்சல் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
அக். 9 - உலக தபால் தினம்.
அக். 10 - தேசிய சேமிப்பு தினம்
அக். 11 - அஞ்சலக ஆயுள் காப்பீடு தினம்
அக். 12 - தபால்தலை சேகரிப்பு தினம்
அக். 14 - வணிக மேம்பாட்டு தினம்
அக். 15 - தபால் தினம்
4. 1856ல் அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவர் "பார்க்கசின்" என்ற முதல் பிளாஸ்டிக்கை உருவாக்கினார்.
5. பாகிஸ்தான் விமானத்தை வீழ்த்தியதற்காக அபிநந்தன் படைப்பிரிவுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
6. பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் ரக விமானங்களை 59000 கோடிக்கு வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. முதல் விமானத்தைப் பெற பிரான்ஸ் செல்கிறார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
7. ஐஸ்லாந்தில் நடைபெற்ற டூர்னோய் சாட்டிலைட் சர்வதேச வாள்வீச்சுப்போட்டியில் இந்திய வீராங்கனை பவானி தேவி வெண்கலம் வென்றார்.
8. 66வது டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் 350 வது டெஸ்ட் விக்கெட் எடுத்தார். நடப்பு நிகழ்வுகள்- 08.10.19 | Sparks Academy
-----------------------------------------------------------------------
1. இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு:
"அண்டவியலில் தத்துவார்த்த கண்டுபிடிப்பு"களுக்காக கனடிய-அமெரிக்க இயற்பிலாளர் ஜேம்ஸ் பீப்ல்ஸ் மற்றும் "சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும் ஒரு வெளிக்கோளைக் கண்டுபிடித்ததற்காக" சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் மிசெல் மேயர் மற்றும் டிடியர் கியுலோஸ் ஆகியோருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
2. வருமான வரி மதிப்பீட்டை வேகப்படுத்தவும் எளிமைப்படுத்தவும் தேசிய இ-மதிப்பீட்டுத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
3. "இ-தந்த் சேவா" என்பது சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தேசிய வாய்வழி சுகாதார திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது. இந்த முயற்சி வாய்வழி ஆரோக்கியத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அருகிலுள்ள வாய்வழி சுகாதார சேவை வசதி பற்றிய தகவல்களை வழங்குகிறது.
4. ரிசர்வ் வங்கி நடத்திய நுகர்வோர் நம்பிக்கை ஆய்வில் நாட்டில் பொருளாதார நிைலமை மோசமடைந்துள்ளதாக 48 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
5. உலக விண்வெளி வாரம் அக்.4-10 வரை நடைபெறும் உலகின் மிகப்பெரிய விண்வெளி நிகழ்வு. இந்த ஆண்டு இந்த நிகழ்வில் 80 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. மையப்பொருள் "சந்திரன்: நட்சத்திரங்களுக்கான நுழைவாயில்".
6. அக்.7 - உலக பருத்தி நாள். நடப்பு நிகழ்வுகள்- 09.10.19 | Sparks Academy
-----------------------------------------------------------------------
1. மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு- வெவ்வேறு ஆக்சிஜன் அளவுகளை உடல் அணுக்கள் எவ்வாறு உணருகின்றன என்பதைக் கண்டறிந்ததற்காக வில்லியம் ஜிகே லின், கிரெக் எல் செமன்ஸா ஆகிய இரு அமெரிக்க விஞ்ஞானிகளுக்கும், பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ஜே ராட்கிளிஃபுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் கண்டுபிடிப்பு புற்றுநோய்க்கு மருந்துகள் உருவாக்க உதவுகிறது.
2. 87வது விமானப்படை தினம் அக். 9 ல் உத்திரப்பிரதேசத்தில் ஹின்டன் படைத்தளத்தில் கொண்டாடப்பட்டது.
3. கடுமையான நிதி நெருக்கடியில் ஐ.நா சபை உள்ளதாக ஐ.நா சபைத் தலைவர் அன்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
4. காலநிலை மாற்றம் தொடர்பான C-40 மாநாடு டென்மார்க்கில் அக். 9-12 ல் நடைபெறுகிறது.
5. சனிக்கோளைச் சுற்றும் 20 புதிய துணைக்கோள்கள் கண்டுபிடிப்பு.
6. 2019-20 நிதி ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 14.05 கோடி டன்னாக இருக்கும் என கணக்கிட்டுள்ளது NBHC.
7. 60 வருட சென்னை IIT யால் வழங்கப்படும் குடியரசுத்தலைவர் விருதினை முதன்முறையாக மாணவி கவிதா கோபால் பெற்றார்.
அக்டோபர் 10
10.10.19 – வியாழக்கிழமை
- உலக போட்டித்திறன் தரவரிசை – இந்தியா 68வது இடம். கடந்த ஆண்டு 58வது இடத்தில் இருந்தது.
- வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு - லித்தியம் பேட்டரிகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாது அதன் தற்போதைய நிலையிலான வளர்ச்சி குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதற்காக, வேதியியல் விஞ்ஞானிகளான ஜான் பி குட்எனாப், ஸ்டான்லி விட்டிங்ஷஹாம் மற்றும் அகிரா யோஷினோவுக்கு 2019 ம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.
- அக்டோபர் 10 – உலக மனநல தினம். உலகம் முழுவதும் மனநலம் பேணுதலை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக இந்த விழிப்புணர்வு நாளை உலக மனநல கூட்டமைப்பு 1992-ஆம் ஆண்டு ஏற்படுத்தியது.
- முடிவுக்கு வரும் ‘லிபார்’ - ‘லண்டன் இன்டர் பேங்க் ரேட்’ என்பதன் சுருக்கமே லிபார். இது லண்டனைச் சேர்ந்த வங்கிகளின் வட்டி விகிதங்களை கணக்கில் கொண்டு சராசரியாக கணக்கிடப்படுகிறது. சர்வதேச பணப் பரிமாற்றங்களுக்கான வட்டி விகிதங்களுக்கு இந்த லிபார் வட்டி விகிதம்தான் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த லிபார் வட்டி விகித முறை வரும் 2021 இறுதி வரை மட்டும் நடைமுறையில் இருக்கும்.
- சா்வதேச
கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தாா்
இந்திய அணியின் ஒரு நாள் அணியின் கேப்டன் மிதாலி
ராஜ். 36 வயதாகும் மிதாலி ராஜ், இந்தியாவுக்காக 10 டெஸ்ட் போட்டிகள், 89 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளாா்.
- இந்திய
தடகள வீராங்கனை நிர்மலா , ஊக்கமருந்து சோதனையில்
சிக்கியதால் நான்கு ஆண்டுகள் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை தமிழகம் வருகை. மாமல்லபுரத்தில் மோடி-ஜின்பிங் சந்திப்பு.
பதிவிறக்கம் செய்ய: Download
அக்டோபர் 11
அக்டோபர் 12
அக்டோபர் 13
Download
தினமும் நடப்பு நிகழ்வுகள், வேலை வாய்ப்பு செய்திகளை PDF வடிவில் பெற, Subscribe to our Telegram Channel : https://t.me/SparksTNPSC
அக்டோபர் 14
அக்டோபர் 15
தினமும் நடப்பு நிகழ்வுகள், வேலை வாய்ப்பு செய்திகளை PDF வடிவில் பெற, Subscribe to our Telegram Channel : https://t.me/SparksTNPSC
Join Telegram: https://t.me/SparksTNPSC
No comments:
Post a Comment